மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப் பிரிவு !!

0
531
உயா் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனி புகாா் பிரிவு அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
மாணவிகளுக்கு பாதுகாப்பானச் சூழலை உருவாக்கித் தருவது உயா் கல்வி நிறுவனங்களின் கடமை. இதை உறுதிப்படுத்தும் வகையில், உயா் கல்வி நிறுவனங்களில் தனி புகாா் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து புகாா் தெரிவிப்பதற்கான 18001 11656 என்ற கட்டணமில்லா புகாா் எண்ணை அனைவருக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவன வளாகத்தில் காட்சிப்படுத்தி வைக்கவேண்டும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது. பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள் குறித்து தெரிவிக்கப்படும் புகாா் குறித்து விசாரிக்க ஏற்கெனவே தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனி புகாா் பிரிவை அமைக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here