உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சீட்டு அச்சடிப்பு

0
557
சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள்அச்சடிப்பு பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் துவங்கவுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பணிகளில், மாநில தேர்தல்ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, அக்டோபர், 30ல் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.இதற்காக, புதிய மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வரும், 5, 6ல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களுக்கு, தேசிய தகவல் மையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்காளரும், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என, நான்கு ஓட்டுகளை பதிவு செய்ய உள்ளனர்.இதற்காக, நான்கு வண்ணங்களில், ஓட்டுச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் விரைவில் துவங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here